The Indian Times

பச்சை கலரு தாவணி ,தலையில மல்லிகைப்பூ சும்மா தேவதை மாறி வந்து நின்னாங்க பாரு | Aiswarya Rajesh latest cute video

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நீதானா அவன் என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.இந்த படத்திற்கு பிறகு அவர் 8 படங்கள் தமிழில் நடித்துள்ளார்.பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய அட்டகத்தி படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து போராடி வந்தார் அப்பொழுதுதான் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.இந்த ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.

Advertisement

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் ரசிகர்களை தன்னை திரும்பி பார்க்க செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.காக்க முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும்,தனுஷுக்கு ஜோடியாக வட சென்னை படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார்.

Advertisement

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவில் பாவடை தாவணியில் தலையில் மல்லிகை பூவுடன் வந்து அசத்தியுள்ளார்.இதனை கண்ட இவரது ரசிகர்கள் இவரின் அழகில் சொக்கி போய் விட்டனர்.நீங்க ரொம்ப சூப்பரா இருக்கீங்க என அவரை வர்ணித்து கமெண்ட் செய்து லைக்குகளையும் அள்ளிக்குவித்து வருகின்றனர்.ஈந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in