The Indian Times

டாக்டர் தேதி கொடுத்துட்டாங்க..ஐலா-க்கு குட்டி பாப்பா வர போறா.. தேதியை சொன்ன ஆல்யா | Alya Manasa

சின்ன திரையில் நமக்கு பிடித்தமான ஜோடிகள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா. இவர்களின் மூத்த குழந்தை ஐலா, பார்பதற்கு பொம்மை போல இருக்கும் ஐலா செய்யும் குறும்புகளுக்கு அளவே இல்லை. இவர்கள் சஞ்சீவ் ஆல்யா இருவருமே விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலமானவர்கள்தான். இந்த சீரியலில் சஞ்ஜீவிற்கு ஜோடியாக ஆல்யா நடித்திருந்தார். சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜத்திலும் ஜோடியாக மாறிவிட்டனர். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

இவர்களுக்கு முதலாவதாக பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையின் பெயர் ஐலாசையத். ஐலா செய்யும் குறும்பு வீடியோக்களை ரசிக்க மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என சொல்லலாம். அந்த அளவிற்கு ஐலா மீதும், ஆல்யா மற்றும் சஞ்சீவ் மீதும் மக்கள் அன்பை பொழிந்து வருகின்றனர். தற்போது ஆல்யா மானசா இரண்டாவதாக கர்ப்பமாக உள்ளார். அதனால் சஞ்சீவ் ஆல்யா மீது காட்டும் அன்பு பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். YouTube Video Code Embed Credits: Little Talks

Advertisement

தற்போது ஆல்யா மானசா இரண்டாவது முறை கர்ப்பமாக உள்ளார். இரண்டாவதாக பிறக்க உள்ள குழந்தைக்கு பெயர் கூட தேர்வு செய்து வைத்துவிட்டனர். பெண் பிள்ளையாக இருந்தால் லைலா என்றும் ஆண் பிள்ளையாக இருந்தால் அர்ஷ் என்றும் பெயர் வைப்பதாக உள்ளனர். தற்போது ஆல்யா மானசாவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் உங்களுக்கு பிரசவ தேதி என்றைக்கு என்று கேட்டுள்ளனர். அதற்கு வருகிற மார்ச் 23 முதல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in