The Indian Times

சூப்பர் சிங்கர் ஆதித்யா வெளியிட்டுள்ள புது மியூசிக் ஆல்பம் | Amour – Music Video | Adithya RK

சூப்பர் சிங்கர் சீசன் 8ல் ஒரு போட்டியாளர்தான் ஆதித்தயா. இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை, குணசித்திர வேடங்கள் என திரைத்துறையில் கலக்கிய மீரா கிருஷ்ணன் அவர்களின் மகன் ஆவார். மேலும் இவர் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மீரா கிருஷ்ணன் நடிப்பைத் தாண்டி ஒரு நல்ல பாடகர், பல பக்திப் பாடல்கள் பாடி கேசட்டுகளை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும் சிறந்த வீணை கலைஞரும் கூட. தனது யூடியூப் பக்கத்தில் பாடல்களை வீணையில் இசையாக வாசித்து பலரின் மனங்களை கவர்ந்து வருகிறார்.

Advertisement

இவரது மகன்தான் ஆதித்யா. சூப்பர் சிங்கர் சீசன் 8ல் பங்கேற்று கலக்கி வந்தார். இவரின் குரலுக்கு பல ரசிகர்கள் உண்டு. இவர் ஒரு கிட்டார் ப்ளேயரும் கூட. இவர் இன்ஸ்டாகிராமில் பல பாடல்களை அவரது ஸ்டைலில் பாடி அசத்துவார். கமலின் உனக்கென்ன மேலே நின்றாய் பாடலை ஆல்பமாக வெளியிட்டார். இது நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இவரது இந்த ஆல்பத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பகிர்ந்து இருந்தார். மேலும் இவர் பாடல் எழுதுவது, மியூசிக் கம்போஸ் செய்வது என பல திறமைகளை கொண்டுள்ளார். Youtube Video Code Embed Credits: Saregama Tamil

Advertisement

தற்போது ஆதித்யா அவர்களுக்கு படத்தில் பாடும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் வெளியாகவுள்ள டான் படத்தில் “பே” Bae என்ற பாடலை பாடியுள்ளார். இது வேற வெவல் டிரெண்ட் ஆனது. தற்போது ஆதித்யா அமோர் என்ற மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார். பாடகராக இருந்து தற்போது தனது அடுத்த பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in