The Indian Times

நீ கிடைத்தது பாக்கியம்..அமீர் பிறந்தநாளுக்கு SURPRISE கொடுத்த PAAVANI…நெகிழ்ந்த அமீர்…

நடனத்தின் மீது கொண்ட காதலால் அதில் எதையாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கினார் அமீர்.அப்படி வாழ்க்கையை தொடங்கி இன்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருப்பவர் தான் இவர்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்தவர் அமீர்.மேலும் பல விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.தனது நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு இவர் முதன் முதலில் ஏன்டா தலையில் எண்ணெய் வைக்கல என்ற படத்தில் நடன இயக்குனராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.சிறப்பாக விளையாண்டு மக்களின் கவனத்தினை அதிகம் ஈர்த்தார்.இந்த நிகழ்ச்சி மூலம் அதிக பிரபலம் ஆகினார் அமீர் மேலும் இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பாவனியை இவருக்கு பிடித்து போகவே அவரை காதலிப்பதாக கூறி வருகிறார்.மேலும் பாவனி தனது காதலை ஏற்றுக்கொள்வார் என காத்துக்கொண்டிருக்கிறார் அமீர்.தற்போது இவர் பாவனியுடன் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி பட்டையை கிளப்பி வருகிறார்

இந்நிலையில் நேற்று இவருக்கு பிறந்தநாள்,இவரின் பிறந்தநாளுக்கு பாவனி நெகிழ்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து தனது காதலையும் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் நேற்று அமீருகே தெரியாமல் பிக் பாஸ் போட்டியாளர்களான பிரியங்கா,நிரூப்,அபிஷேக்,பாவனி ஆகியோர் அவருக்கு கேக் வாங்கி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.இதனால் அவர் மிகவும் நெகிழ்ந்து போய் உள்ளார் மேலும் பாவானி நீ என்கூட தானே இருந்தே ஒரு வார்த்தை கூட இத பத்தி சொல்லல எனவும் தெரிவித்திருந்தார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.பலரும் அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in