The Indian Times

மணிமேகலை என் வாழ்க்கையை காப்பாத்தணும்..கையெடுத்து கும்பிட்ட கிரேஸ் அக்கா… | COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.தற்போது கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு அரை இறுதி சுற்று போட்டி நடைபெற்றுள்ளது.இந்த போட்டியில் தர்ஷன்,வித்யூலேகா மற்றும் அம்மு,ஸ்ருதிக்கா ஆகியோர் இறுதி போட்டிக்கு சென்றனர்

இந்நிலையில் இந்த வாரம் முதலில் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு தற்போது வைல்ட் கார்ட் போட்டி நடத்தப்பட்டுள்ளது.தற்போது இந்த நிகழ்ச்சியின் சிறிய வீடியோ தொகுப்பினை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இந்த போட்டியில் மணிமேகலையால் வெளியேறிய கிரேஸ் கருணாஸ் போன தடவை மணிமேகலை எனக்கு அகல்விளக்கு ஏற்றி வெளியே அனுப்பிட்டா,இன்னைக்கு ஒரு குத்து விளக்கு ஏற்றி என்னை காப்பாற்ற வேண்டும் என கெஞ்சி கேட்டுள்ளார்.இது பார்ப்பதற்கே பெரும் நகைச்சுவையாக அமைந்துள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

https://www.youtube.com/watch?v=hWSep6kRdXk&feature=youtu.be

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in