The Indian Times

கைபுள்ள வடிவேலு போல மாறிய அறந்தாங்கி நிஷா! சிரித்து ரசிக்கும் ரசிகர்கள்

விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழியில் கலந்து கொண்ட நிஷா ஆரம்பத்தில் தனியாக ஸ்டாண்ட் அப் காமெடி செய்து கொண்டிருந்தார். பின்னர் பழனியுடன் சேர்ந்து ஜோடியாக இருவரும் கலக்கினார்கள். இதன் மூலம் அறந்தாங்கி நிஷாவிற்கு

Advertisement

பல பட வாய்ப்புகள் கிடைத்தது. இதை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இதுவரை ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் , பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்த நிஷா பிக் பாஸில் வேறு ஒரு நபராக தெரிந்தார். மக்களின் ஆதரவு இருந்ததால் பிக் பாஸிற்குள் தாக்கு பிடித்தார் நிஷா. இதை தொடர்ந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து விடியோக்கள்

Advertisement

வெளியிட்டு வருகிறார். மீம்ஸ் என்றால் அதில் வடிவேலு ரியாக்ஷன் இல்லாமல் இருக்காது. அந்த வகையில் நடிகர் வடிவேலுவின் மிக பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று கைப்புள்ள கதாபாத்திரம். தற்போது அந்த கதாபாத்திரம் போல் வேடம் அணிந்து இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார் நிஷா. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in