The Indian Times

வாத்தி கம்மிங் பாடலை பார்த்து விஜயை போலவே Step போடும் வார்னர்!

5 வயதிலிருந்து 50 வயது வரை அனைவரையும் நடனமாட வைக்கும் குத்துப்பாடலாக இருக்கிறது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல். இன்று வரை பல மக்களின் பிளே லிஸ்டில் இருக்கும் இந்த பாடல் அனிருந்து இசையமைப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் திரைப்படம் எரிதிர்பார்காத அளவுக்கு வசூலை குவித்தது. கொரோன பாதிப்பின் காரணத்தால் படம் வெளியாக

Advertisement

ஒரு வருடம் தாமதமானாலும் இந்த பாடல் முன்னதாகவே வெளியாகி அனைவரையும் கவர்ந்திழுத்தது. ஒரு வருடம் கடந்தும் இன்றும் பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளனர். மேலும் உலகமெங்கும் உள்ள பல கோடி மக்கள் இந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ல் பதிவேற்றம் செய்துள்ளனர்.

Advertisement

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் வார்னர் , அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வாத்தி கம்மிங் பாடலை பார்த்து அதில் விஜய் போடு அதே ஸ்டெப்களை போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ விஜய் ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in