The Indian Times

“என்னையும் Oviya வையும் வெச்சு Script பண்ணிட்டாங்க” Bigboss உண்மையை உடைக்கும் சக்தி

Watch the video below நடிகன் திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சக்தி. பிரபலமான இயக்குனர் பி.வாசு அவர்களின் மகன் இவர். சினிமாவில் எளிதாக இவர் நுழைய வாய்ப்பு கிடைத்திருந்தாலும், இவரால் சினிமாவில் ஒரு சிறந்த இடத்தை பிடிக்க முடியவில்லை. இவர் தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு மகேஷ் , சரண்யா மற்றும் பலர் , நினைத்தாலே இனிக்கும் , ஆட்டநாயகன் போன்ற படங்களில் நடித்தார் சக்தி.

Advertisement

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த திரைப்படம் சிவலிங்கா. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் லாரன்ஸ் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சக்தி நடித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் விஜய் டிவியின் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரை பலர் நடிகர் சக்தி என்பதை விட trigger சக்தி என்று தான் அழைத்தனர். அதில் அந்த நேரத்தில் நடிகை ஓவியாவுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த சமயத்தில் ஓவியவுடன் சக்தி வாக்குவாதத்தில் Watch the video below

Advertisement

ஈடுபட்டது பிக்பாஸ் ரசிகர்களை கோபத்திற்காளாகியது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், சக்தி பிக்பாஸிற்கு பிறகு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சி முழுவதுமே scripted தான் , அதனால் என் வாழ்க்கையே மாறிவிட்டது. பெண்கள் அனைவரும் என்னிடம் ஓவியா போல் நடந்துகொள்ள ஆரம்பித்து விட்டனர் என்று மனவருத்தத்துடன் கூறியுள்ளார். Watch the video belowVideo embeded credits to Cineulagam youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in