The Indian Times

அவன் இவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நிஜ அண்ணன் தம்பி நடிகர்கள் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஏராளமான கதைக்களத்துடன் வெவ்வேறு வகையான படங்கள் வந்துள்ளன. அதில் பல நடிகர் நடிகைகளை பிரபலபடுத்தியது, அவர்களது நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இயக்குனர்களின் கதை அவர்களது இயக்கமும் சேரும். பல இயக்குனர்கள் தனக்கென்ற வித்தியாசமான பாணியில் இயக்குவர். அப்படி தமிழ் சினிமாவில் முன்பு பாராத வகையில் படத்தை இயக்கி வெற்றி கண்டவர் தான் இயக்குனர் பாலா. இவர் முதன்முதலில் விக்ரம் நடித்த சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

Advertisement

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இவரது முதல் படத்திலே தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட், ஃபிலிம் ஃபேர் விருது என பல விருதுகளை வாங்கினார். இவர் தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள் , அவன் இவன், பரதேசி போன்ற படங்களை இயக்கினர். அனைத்து படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே வரவேற்பு பெற்றது. இவர் படங்கள் அனைத்து வகையான விருதுகளையும் பெற்றுள்ளது.

Advertisement

பல தேசிய விருதுகளும் இவர் படங்கள் பெற்றுள்ளது.2011ல் இவர் இயக்கிய அவன் இவன் எனும் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது என்றே கூறலாம். இந்த படத்தில் விஷால், ஆர்யா இருவரும் சகோதகர்களாக நடித்திருந்தனர். விஷாலின் வித்தியாசமான தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் ஆர்யாவும் வழக்கத்தை விட சற்று வித்தியாசமாகவே நடித்திருந்தார்.

இந்த படம் பாலாவின் பாணியில் வந்த ஒரு வெற்றி படம் ஆகும். ஆனால் இந்த படத்தில் பாலா விஷால், ஆர்யாவுக்கு பதிலாக உண்மையான சகோதர்களை நடிக்க வைக்கலாம் என்றிருந்தாராம். அது வேறு யாரும் இல்ல நடிகர் சூர்யா, கார்த்தி அல்லது நடிகர் ஜித்தன் ரமேஷ், ஜீவா தான். ஆனால் கடைசியில் படத்தில் நடித்தது விஷால், ஆர்யா. இந்த திரைப்படம் அவர்களது சினிமா துறையில் முக்கியமான படம் என்றே சொல்லலாம்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in