The Indian Times

சார் இந்த கேட்டரிங் கான்டிராக்டை நம்பி நிறைய செலவு பண்ணிட்டேன்…. அழுது கெஞ்சிய பாக்கியா | பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

Advertisement

காலனி தேர்தலில் பாக்கியாவுக்கு எதிராக நின்று ராதிகா தோல்வி அடைந்தார்.இதனால் பாக்கியா மேல் கடுப்பில் இருக்கும் ராதிகா,தனது நிறுவனத்தில் ராதிகாவுக்கு கொடுத்த கேதரின் கான்டிராக்டை கிடைக்க விடாமல் கெடுத்துள்ளார்.ராதிகா கூறிய பொய்யை நம்பி நிறுவனத்தின் தலைவர் பாக்கியாவிடம் சென்று உங்களுக்கு காண்டிராக்ட் கிடைக்காது,கொடுத்த காசை திருப்பி கொடுங்கள் என கூறியுள்ளார்.இதனால் பாக்கியா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.சார் இந்த கேட்டரிங் கான்டிராக்டை நம்பி நிறைய செலவு பண்ணிட்டேன் என கெஞ்சியும் பாக்கியாவுக்கு கான்ட்ராக்டை கிடைக்க விடாமல் செய்துள்ளார் ராதிகா,மேலும் பாக்கியா படும் வேதனையையும் தூரம் நின்று பார்த்து ரசித்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் ராதிகா மேல் இருக்கும் கோவத்தினை அதிகப்படுத்தியுள்ளது

https://www.youtube.com/watch?v=1caX50KrikE

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in