ஓ பெருமாளே உன்னை நம்பி தானே….VIP பட பாடலுக்கு அச்சு அசல் தனுஷை போல அப்படியே நடனமாடிய KPY பாலா

எதையாவது சாதித்து விடலாம் என சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் செல்கின்றனர்.அதில் சாதித்தவர்கள் குறைவு.காரணம் முயற்ச்சி செய்யாததால்.எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

ஓ பெருமாளே உன்னை நம்பி தானே....VIP பட பாடலுக்கு அச்சு அசல் தனுஷை போல அப்படியே நடனமாடிய KPY பாலா 1

விளம்பரம்

கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கடின உழைப்பினால் வெற்றியாளராக மாறினார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு. இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்க பலர் உள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.வாரம் தோறும் புது புது வேடங்களில் வந்து அனைவரையும் கலாய்த்து சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

ஓ பெருமாளே உன்னை நம்பி தானே....VIP பட பாடலுக்கு அச்சு அசல் தனுஷை போல அப்படியே நடனமாடிய KPY பாலா 2

விளம்பரம்

தற்போது இவர் வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் வாட்ட கருவாடு பாடலுக்கு தனுஷை போல அப்படியே அச்சு அசல் நடனமாடி அசத்தியெடுத்துள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் பாலாவின் நடன திறமையை வெகுவாக பாராட்டி ஒரு நாள் கட்டாயம் நீங்க மேல வருவீங்க என கூறி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment