The Indian Times

காசேதான் கடவுளடா..என்னை படுத்துதடா… மிரட்டலாக வெளியாகிய துணிவு 2ND SINGLE

காதல் மன்னன் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித்.1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் தல அஜித்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.இவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் இவரின் சினிமா வாழ்வுக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படம் பெரும் விமர்சையாக வெற்றிபெற்று அஜித்குமாரை தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது.பல தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து படம் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் அஜித்.வரிசையாக தோல்விகளை கண்ட பொழுது அஜித் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்து வந்து பட்டையை கிளப்பினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ்.பைக் ரேஸ் ,துப்பாக்கி சுடுதல் என பலவிதமான வித்தைகளை கற்றுக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்.அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.இப்படத்திற்கு இடைவெளி விட்டு அவர் அண்மையில் வெளிநாடுகளில் பைக் ரைடு செய்து வந்தார்.எல்லாவற்றையும் முடித்து விட்டு தற்போது மீண்டும் சென்னை திரும்பி துணிவு படப்பிடிப்பினை முடித்துள்ளார்.

Advertisement

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இப்படத்தினை போனி கபூர் தயாரிக்க,ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.அண்மையில் வெளியாகிய இப்படத்தின் சில்லா சில்லா என்ற முதல் பாடல் பெரும் ஹிட் அடித்தது.அதனை தொடர்ந்து தற்போது காசேதான் கடவுளடா என்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பெருமளவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Embed video credits : zee music south

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in