The Indian Times

RRR,KGF கஷ்டப்பட்டு எடுத்த வசூலை இரண்டே நாட்களில் தூக்கிய அவதார் 2

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த படம் அவதார்.இப்படத்திற்கு இன்று வரை பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அவதார் முதல் பாகத்திற்கு பிறகு இரண்டாவது பாகத்தினை எடுக்க இயக்குனர் ஜேம்ஸ் 2014 ஆம் ஆண்டு திட்டமிட்டார்.ஆனால் இறுதியாக 2018ல் தான் பட வேலைகளை தொடங்கினார்.இரண்டாம் பாகத்துடன் சேர்த்து 3ஆம் பாகத்தின் சில காட்சிகளையும் எடுத்துள்ளதாகவும்,பட்ஜெட் குறைவாகியுள்ள காரணத்தினால் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தற்போது சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமான அவதார் – தி வாட்டர் ஆஃப் வே உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.ரசிகர்கள் தொடர்ந்து படத்தினை கண்டு களித்து வருகின்றனர்.பல திரையரங்குகள் தமிழகத்தில் ஹவுஸ்புல் காட்சிகளாக சென்று வருகிறது.படத்தில் விசுவல் காட்சிகள் நேரில் காண்பது போல அமைந்துள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இப்படம் சுமார் 250 மில்லியன் டாலர் செலவில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் இரண்டு நாள் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளது

Advertisement

இந்தியாவில் ஆர் ஆர் ஆர் ,கேஜிஎப் பாகுபலி போன்ற படங்கள் ஆயிரம் கோடி வசூலை தொட பல நாட்கள் ஆகிய நிலையில் அவதார் பாகம் 2 வெளியாகி இரண்டே நாட்களில் 2ஆயிரம் கோடி வசூலை உலகம் முழுவதும் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது சினிமா ரசிகர்களுக்கே பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்துவது போல அமைந்துள்ளது.சாதனையில் புதிய மைல் கல்லை மீண்டும் எட்டியுள்ளது அவதார் என்று தான் கூறவேண்டும்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in