The Indian Times

உங்க சாப்பாடு நல்லா இல்லைனு எல்லாரும் சொல்லுறாங்களே… பாக்கியாவிடம் வீண் வம்பு இழுத்த ராதிகா… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தற்போது பாக்கியா படிப்படியாக வளர்ந்து கேட்டரிங் ஒன்றை துவங்குகிறார்,இந்த கேட்டரிங் கான்டிராக்டை ராதிகா நிறுவனத்திடம் இருந்துதான் வாங்குகிறார் பாக்கியா.இதனால் பாக்கியாவை கண்டு பொறாமைப்படும் ராதிகா அவரிடம் பிரச்சனை செய்வதற்கு கேன்டீன் வந்து உங்க சாப்பாடு நல்லா இல்லைன்னு சொல்லுறாங்க,சுத்தமா சமைக்கிறீங்களா என்ன என்று பாக்கியாவிடம் கேள்வி எழுப்புகிறார்.பாக்கியா ராதிகாவின் அணைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்,இதனால் பாக்கியா மீது ராதிகா கடுமையாக கோபமடைகிறார்.

https://www.youtube.com/watch?v=DA0kbI1mALs

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in