The Indian Times

பிடிக்காத கல்யாணம்..3 பிள்ளைகள்…மனம் திறந்து வேதனையுடன் பேசிய பாக்கியலட்சுமி HERO

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.இந்த நாடகத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவை ஆகினார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு கலக்கி வருகிறார்.இந்த பதிவிடும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது புதைய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் சதிஷ் குமார்.இந்த வீடியோவில் அவர் கூறியதாவது,இன்னைக்கு நிறைய பேர் மனசுல கேள்வி வச்சிட்டு கேட்க முடியாம இருகாங்க,அந்த கேள்விகளுக்கு இப்போ பதில் சொல்ல போறேன் ,பாக்யா கூட எப்படி புடிக்காம வாழ்ந்த மூன்று குழந்தைகள் பெற்றாய்,என்று கேள்வி கேட்கிறார்கள்,நான் அதனை கோபியாக உங்களிடம் கூறுகிறேன்.குடும்பத்தில் தலைவி மட்டுமா இருக்கா,தலைவன் ,மாமா,மாமியார் எல்லாரும் இருக்காங்க.ஹீரோயின் கதையை மட்டும் சொன்னா போதுமா,கோபி கதை,ராதிகா கதை எங்க அப்பா கதை சொல்ல வேண்டாமா,நான் ஒரு நடிகர் எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் ,நிறைய பேர் என்னை தாக்குறாங்க அதை பத்தி இனி நான் பேச போறதில்லை,நான் நடிக்கிறேன் ,ஆனால் உண்மையிலேயே நிறைய பேர் பிடிக்காதவங்க கூட வாழுறாங்க அவங்களாம் பாவம்,என நாடகத்தினை பற்றி வீடியோ வெளியிட்டுள்ளார்

Embed video credits : Behindwoodstv

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in