The Indian Times

21 வயசு பொண்ணு கூட நடிக்கும் – GP Muthu-வின் BUMPER திரைப்படம்

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போடா தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார் ஜிபி முத்து.தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக தூத்துக்குடி,திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் கதாநாயகனாக வெற்றி நடித்துள்ளார்,ஜிபி முத்து துப்பாக்கி பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக ஷிவானி இப்படத்தில் நடித்துள்ளார்.படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.இப்படத்தில் ஜிபி முத்து வரும் காட்சிகள் ரசிகர்களிடம் கலகலப்பினை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.மேலும் ஜிபி முத்து இப்படத்தில் நடிப்பது படத்திற்கு கூடுதல் பலம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்

Embed video credits : polimer news

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in