The Indian Times

GP முத்துவை உள்ளங்கையில் வைத்து தாங்கும் போட்டியாளர்கள்… ஏன்னா TASK அப்படி… BIGG BOSS PROMO

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,ஆரம்பித்த சில நொடிகளே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்து வருகின்றனர்

Advertisement

இன்றைய நிகழ்ச்சி ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.தற்போது கிட்சன் அணி ,க்ளீனிங் அணிகள் என போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.தங்களின் அணி சிறந்த அணி என்பதை நிரூபிக்க மற்ற போட்டியாளர்கள் எதை கேட்டாலும் நீங்கள் செய்ய வேண்டும் என பிக் பாஸ் கூறியுள்ளார்.இதனால் அனைவரும் உற்சாகமாக உணவு ஊட்டி விட கூறி அலப்பறை செய்து வருகின்றனர்.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in