The Indian Times

pathala pathala பாடலுக்கு உலகநாயகன் போல் நடனம் ஆடிய BIGGBOSS MUGEN

மலேசியாவை பூர்விகமாக கொண்டவர் முகேன்.இவருக்கு சிறுவயதில் இருந்தே இசையின் மேல் தீராத காதல் இருந்ததால்,சொந்தமாக பாடல் எழுதி பல ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார்.அந்த வகையில் இவர் பாடிய சத்தியமா நான் சொல்லுறேண்டி என்ற பாடல் மிக பிரபலமாகியது.இந்நிலையில் சரியான வாய்ப்பிற்காக எதிர்பார்த்து காத்திருந்த முகேனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிர்ஷ்டம் கதவை தட்டியது.

Advertisement

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக களம் இறங்கி சிறப்பான விளையாட்டை விளையாடி மக்களின் மனதினை வென்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் யார் என்பதை பட்டிதொட்டி எங்கும் பரப்பினார் முகேன்.மேலும் இந்த சீசனில் டைட்டிலயும் தட்டிச்சென்றார் முகேன்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முகேனுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.வேலன் எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisement

தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள பத்தலை பத்தலை என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த பாடல் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் முகேன் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் நீங்க கமல் போலவே நடனம் ஆடுகிறீர்கள் என வாழ்த்தி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in