The Indian Times

சண்டை போடாம இருந்தா 12 மணி நேரம் உயிருடன் இருக்கலாம்…நயன்தாராவின் O2 படத்தின் TEASER

நடிகை நயன்தாராவிற்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.அதன்படி ஐரா,கொலையுதிர்காலம் மற்றும் நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்துள்ளார்.டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் ஜி எஸ் விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ட்ரீம் வாரியார் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

இன்று இப்படத்தின் டீசரை  படக்குழு வெளியிட்டுள்ளது.டீசரில்  பயணிகளுடன் பேருந்தில் நயன்தாரா எங்கோ மாட்டிவிடுகிறார்.அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை மையமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது டீசரை  பார்க்கும் பொழுதே தெரிகிறது.வழக்கம் போல் அசத்தலான நடிப்பில் அசத்தியுள்ளார் நயன்தாரா.இப்படம் நேரிடையாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.இப்படத்தின் டீசர்  நயன்தாரா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : disney + hotstar tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in