The Indian Times

எனக்கு Local Food சாப்பிடனும் போல இருக்கு..நயன்தாராவை ரோட்டுக்கடைக்கு அழைத்து சென்ற விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன்.இவர் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா உடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்கும் காதல் மலர்ந்தது.இந்நிலையில் இவர்கள் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து இரண்டாவது முறையாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தினை இயக்கியுள்ளார்

Advertisement

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கல்யாணத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.எப்பொழுது இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.அண்மையில் இவர்களின் திருமணம் வருகிற ஜூன் மாதத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வந்தது.இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை யாரும் வெளியிடவில்லை

Advertisement

இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் லோக்கல் உணவு சாப்பிட்டுள்ளார்.அதனை வீடியோவாக பதிவிட்டு லோக்கல் உணவு மற்றும் காதலி இரண்டும் எப்பொழுதும் சூப்பரான காம்பினேஷன் என தெரிவித்துள்ள்ளார்.இந்த வீடியோவை தற்போது இவரது ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

Ayyanar ...ayan nayan — 17/5/2022

Nice