The Indian Times

Verelevel voice….ஜெசியை பாடியே மயக்கிவிட்டார் நம்ம சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணன்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்.இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் வெள்ளித்திரையில் பாடகராக வலம் வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் தான் அஜய் கிருஷ்ணா.இவரது குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு.இவரை செல்லமாக சின்னத்திரை உதித் நாராயணன் என அழைப்பார்கள்.தற்போது இவர் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடி வருகிறார்.

Advertisement

தற்போது இவர் தனது மனைவி ஜெசிக்காக யாரடி நீ மோகினி படத்தில் இடம்பெற்ற எங்கேயோ பார்த்த மயக்கம் என்ற பாடலை பாடியுள்ளார்,இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை கண்ட அஜய் கிருஷ்ணா ரசிகர்கள் என்ன குரல் சார் உங்களுக்கு,உங்க பாட்டு எல்லாம் வேறே லெவல் என கூறி இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://youtu.be/AsqnKLl0bN8

Embed video credits : behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in