The Indian Times

குட்டி குழந்தையுடன் சுட்டி தனம் செய்யும் விஜய் டிவி புகழ்;வைரலாகும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் சிரிச்சா போச்சு மூலம் நகைச்சுவை நடிகராக சின்னத்திரையில் களம் பதித்தவர் புகழ்.பெண் வேடம் அணிந்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.ஆரம்பத்தில் சிறு சிறு வேடத்தில் மட்டும் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளுக்கு முழுநேரமாக வர தொடங்கினார்.ஆரம்பத்தில் சென்னையில் பல தொழில்கள் செய்து வந்த இவர் சிறு வேடத்தில் நடித்து மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இதனை தொடர்ந்து இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.கோமாளியாக களம் இறங்கி கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி மாபெரும் வரவேற்பை பெற்று பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை புகழ் சேர்த்தார்.முதல் இரண்டு சீசன்களில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிய புகழுக்கு வெள்ளித்திரையில் காமெடி நடிகராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அதனை தொடர்ந்து தற்போது என்ன சொல்ல போகிறாய்,வலிமை,எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.தற்போது ஜூ கீப்பர் எனும் படத்தில் ஹீரோவாகவும் படம் நடித்து வருகிறார் புகழ்.இவர் தற்போது ஒரு சுட்டிக்குழந்தையுடன் செய்த சேட்டை வீடியோ வைரலாகி வருகிறது.நிகழ்ச்சி ஒன்றில் குழந்தை ஒன்று விருதுடன் அமர்ந்திருக்கும் நிலையில் அதனை புகழ் எடுத்து ஒளித்துவைக்கவே அதை குழந்தை அழகாக தேடுகிறது.பின்னர் புகழ் உடன் சேர்ந்து சேட்டை செய்துள்ளது குழந்தை.இந்த அழகிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in