The Indian Times

ஐயோ பாவம்..Strawberry பழத்தை கொடுத்து வித்யுலேகா வாயை அடைத்த குரேஷி..திணறிய வித்யூலேகா..|Cook with comali season 3 promo

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவிங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.ஆனால் கடந்த வார நிகழ்ச்சியில் இருந்து சுட்டி அரவிந்த் வெளியேறினார் .

இந்த வார நிகழ்ச்சியில் கோமாளிகள் சூப்பர் ஹீரோக்கள் மற்றும் வில்லன்கள் போல் வந்து அசதியுள்ளனர்.குக்குகளுக்கு வழக்கம் போல் இந்த முறையும் அவர்களை ஆச்சரியப்படுத்தும் டாஸ்க்குகளை கொடுத்து திணற வைத்துள்ளனர்.Strawberry பழத்தினை எடுத்து கோமாளிகள் தங்களது குக்குகளுக்கு ஊட்டிவிட வேண்டும்,இதனை டாஸ்க் ஆக கொடுத்துள்ள நிலையில்,குரேஷி தொடர்ந்து பழங்களை எடுத்து வித்யுலேகா வாயில் தொடர்ந்து திணித்துள்ளார்.இதனால் வித்யூலேகா விழிபிதுங்கி இருப்பது காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது

Embed video credits: vijay television 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in