The Indian Times

ஐயோ பாவம்…கேன்ஸ் விழாவில் சூட்கேசை தொலைத்து மாற்றுத்துணி இல்லாமல் அவதிப்பட்ட பிரபல விஜய் பட நடிகை

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் பூஜா.அதன்பின் தெலுங்கு சினிமாவில் முழுவதும் நடிக்க தொடங்கி விட்டார்.பின்னர் தனது கடின முயற்சியினால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் மேலும் இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே,அண்மையில் தளபதி நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றார்.அரபிக்குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார்.

Advertisement

தற்போது இவர் பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் கலந்துகொண்டு அனைவரையும் அசத்தி உள்ளார்.ஒட்டுமொத்த விழாவையும் தன்னை திரும்பி பார்க்க செய்துள்ளார் பூஜா.இந்நிலையில் அங்கு அவருக்கு பெரும் சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.பூஜா ஹெக்டே நிகழ்ச்சிக்கு கொண்டுபோன சூட்கேஸ் தொலைந்துவிட்டது.இதில் அவர் விலை மதிப்புள்ள மேக்கப் பொருட்கள் மற்றும் ஆடைகளை வைத்துள்ளார்.இதனால் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னர் வரை அவரும் அவர் உதவியாளரும் பதட்டத்தில் இருந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் தொலைந்த சூட்கேஸை தேடுவதை நிறுத்தி விடும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சியை சிறப்பாக பூஜா ஹெக்டே முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,பூஜா கொண்டு வந்த சூட்கேசில் ஒன்றை இந்தியாவில் அவர் வந்த காரிலேயே விட்டு சென்றுவிட்டார்,மற்றொன்றை கேன்ஸ் விழாவில் தொலைத்துள்ளார்.மேலும் நல்ல வேலை அவர் கொண்டுவந்த நகைகள் அவரிடம் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in