The Indian Times

திருமணம் எப்போ நடக்கும்..குறிகேட்க குலதெய்வம் கோவிலுக்கு சென்ற Nayanthara மற்றும் Vigneshsivan

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் சினிமா உலகம் மற்றும் வெளி உலகம் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகையும் வெளி உலகையும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு நயன்தாராவுடன் சென்று சுவாமி தரிசனம் செய்து புகைப்படத்தினை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.அன்று இவர்கள் வெளியிடும் புகைப்படம் தான் இணையத்தில் பெரிதும் பேசப்படும் ஆகும்.இவர்களின் கல்யாணம் எப்பொழுது என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் அண்மையில் இவர்கள் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.ஆனால் அதிகாரபூர்வ் அறிவிப்பு இதுவரை இவர்களிடம் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து தகவலுக்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது இருவரும் திருச்சியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.சிலர் இவர்கள் கல்யாணம் குறித்து குறி கேட்க சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இவர்களை காண அங்கு கூட்டம் குவிந்துள்ளது.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Embed video credits : Galatta

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in