எப்பவும் என் கூடவே இரு பிரேமா..!! மனைவிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கேப்டன் | Vijayakanth

மக்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் தான் விஜயகாந்த் அவர்கள். திரைத்துறையில் இருந்து, மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலுக்கு வந்தார். சாதிப்பதற்கு நிறமோ, அழகோ தேவையில்லை என்று சாதித்து காட்டியவர். தமிழில் மட்டுமே முன்னணி நடிகராக 150 படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். தனது சிறப்பான நடிப்பால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமா துறையில் கொடிகட்டி பறந்தவர்களில் ஒருவர். ரஜினி, கமல் என இரு துருவங்களின் காலத்திலும் தனக்கென ஒரு முத்திரையை ஆணித்தரமாக பதித்து இருந்தார். அவருக்கு தமிழகம் முழுவதும் இருந்த ரசிகர் மன்றங்களே அவருக்கு பெரிய பலமாக இருந்தது.

எப்பவும் என் கூடவே இரு பிரேமா..!! மனைவிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கேப்டன் | Vijayakanth 1

விளம்பரம்

இந்த ரசிகர் மன்றங்கள் பின்னாளில் கட்சியாக மாற்றப்பட்டு 2005ம் ஆண்டு தமிழகத்தின் இரு பெரும் துருவங்களான திமுக அதிமுகவிற்கு மாற்றாக தேமுதிக என்ற கட்சியை உருவாக்கினார் விஜயகாந்த். தொடங்கிய அடுத்தே ஆண்டே 2006-ல் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். பிறகு 2011-ல்எதிர்கட்சி தலைவரானார். ஜெயலலிதாவை சட்டசபையில் எதிர்த்து கையை உயர்த்தி பேசினார். அதன் பிறகு வந்த அனைத்து தேர்தல்களிலும் தேமுதிக வெற்றியை ருசிக்கவே இல்லை. தொடர் தோல்விகள் விஜயகாந்தை முடக்கி போட்டன. அவரால் முன்பு போல் பேசவோ, நடக்கவோ முடியவில்லை. அவர் பெயரில் வெளியாகும் அறிக்கைகளில் கூட அவர் கையெழுத்து இருப்பதில்லை மாறாக ரப்பர் ஸ்டாம்பு வைத்து கையெழுத்து போட்டு இருப்பார்கள். இப்படியாக சில வருடங்களாக அமெரிக்காவில் மருத்துவம், ஓய்வு என அவரது வாழ்க்கையே முடங்கிவிட்டது எனக் கூறலாம்.

எப்பவும் என் கூடவே இரு பிரேமா..!! மனைவிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கேப்டன் | Vijayakanth 2

விளம்பரம்

சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அதை பார்த்த ஒருவர் கூட கலங்காமல் இருக்க முடியாது. அந்த படத்தை சிங்கம் போல் இருந்த மனதர் இன்று இப்படி ஆகி விட்டாரே என்று ஒரு கனம் கலங்கி போயினர். இந்த நிலையில் மீண்டும் ஒரு புகைப்படத்தை விஜயகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் தனது மனைவி பிரேமலதா அவர்களுக்கு இன்று பிறந்த நாள் என்று வாழ்த்துக்களுடன் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். பிரேமலதாவிற்கு கேக் வெட்டி குடும்பத்துடன் அவர்கள் கொண்டாடி உள்ள புகைப்படத்தை பார்த்து கேப்டன் ரசிகர்கள் சந்தோசம் அடைந்துள்ளனர். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment