The Indian Times

ஹேர் ஸ்டைலை மாற்றி வேற லெவல் கெட்டப்பில் அர்ச்சனா மகள் சாரா | VJ Archana | Zaara

பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டவர்களில் ஒருவர் Vj அர்ச்சனா. இவர் “அன்பு ஜெயிக்கும் நம்புறியா” என்ற வார்த்தை மூலம் மேலும் பிரபலமானார். இதற்கு முன்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “காமெடி டைம்” என்னும் நிகழ்ச்சியை சிட்டி பாபு அவர்களுடன் இணைந்து தொகுத்து வழங்கினார் VJ அர்ச்சனா. அதன் மூலம் சின்னத்திரை, வெள்ளித்திரை என பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருந்தார். பிக்பாஸுக்குப் பிறகு இவரை கலாய்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

Advertisement

இவருக்கு சாரா என்ற மகள் உண்டு. அவரும் அர்ச்சனாவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்று வருகிறார். ஆனால் இவர்கள் இருவர் மீதும் நெட்டிசன்கள் பல விமர்சனங்களை வாரி இறைத்து வருகின்றனர்.! சமீபத்தில் இவர்கள் தங்கள் Youtube பக்கத்தில் வெளியிட்ட பாத்ரூம் Tour வீடியோ மிகப்பெரும் சர்ச்சையானது. அந்த வீடியோ வெளியான பிறகு நெட்டிசன்கள் இவர்கள் இருவரையும் கலாய்த்து எடுத்துவிட்டனர். அதன் பிறகு சில காலம் எந்த சர்ச்சரவிலும் சிக்காமல் இருந்து வந்தனர். Youtube Video Code Embed Credits: Behindwoods TV

Advertisement

மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் “தாயில்லாமல் நானில்லை” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இதை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் இவர்களை வசைபாட தொடங்கி விட்டனர். சாரா வயசுக்கு மீறி பேசுவதாகவும், அது எரிச்சலாக உள்ளதாகவும் இவர்களுக்கு நெகடிவ் விமர்சனங்கள் மட்டுமே வந்த வண்ணம் இருக்கும். ஆனால் இதையெல்லாம் அவர்கள் கண்டு கொள்வதில்லை. தற்போது அர்ச்சனா மற்றும் சாரா இருவரும் இணைந்து ஹேர் ஸ்டைல் மாற்றி செம்ம ஸ்டைல் ஆக உள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

https://youtu.be/IPeP8tNO5RY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in