The Indian Times

நைட் 2.30க்கு நடந்த ஷூட்டிங்.. மரண குத்து குத்திய கிரேஸ் மற்றும் ரோஷினி | Grace Karunas | Roshini

நடிகர் கருணாஸ் அவர்களின் மனைவி கிரேஸ் கருணாஸ். இவர் திரைப்படங்களில் பிண்ணனி பாடகியாக உள்ளார். சீனா தான டோய், திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடல்கள் எல்லாம் இவர் பாடிய பாடல்கள்தான். இவர் குறைவான பாடல்களை பாடிய போதிலும் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது என்றே சொல்லாம். இவர் கலக்கபோவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இவர் ராமருடன் இணைந்து செய்யும் காமெடிகள் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இவரை யார் எவ்வளவு கலாய்த்தாலும் சிரித்துகொண்டே கடந்து விடுவார். அந்த குணம் பார்க்கும் அனைவரையும் பிடிக்க வைத்துள்ளது.

Advertisement

இவர் தற்போது குக் வித் கோமாளியில் குக்காக பங்கேற்றுள்ளார். இவரின் சமையல் சூப்பராக இருப்பதால் இவர்தான் இந்தமுறை டைட்டில் வின் பண்ணுவார் என்று ரசிகர்கள் ஆருடம் கூறி வருகின்றனர். இவருடைய மகன் கென் கருணாஸ். இவரும் அம்மாவை போலவே நடிப்பு, பாட்டு என அசத்தி வருகிறார். அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்து அசத்தினார். கிரேஸ் கருணாஸின் உடலைப் பற்றி எப்பொழுதும் கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிரேஸ் கருணாஸ் சிரித்துக்கொண்டே கடந்துவிடுவார். YouTube vide code embed credits: Behindwoods.

Advertisement

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் கிரேஸ் கருணாஸுக்கும், சூப்பர் சிங்கர் ரோஷ்ணிக்கும் குத்துப்பாட்டு யுத்தம் நடக்கிறது. ஒருவர் முடிக்கும் பொழுது இன்னொருவர் அடுத்தப் பாடலை பாடுகிறார். இது நள்ளிரவு 2.30 மணிக்கு எடுக்கப்பட்ட ஷூட்டிங் என்று சொல்லப்படுகிறது. இரவானாலும் அந்த வேகம் குறையாமல் பாடி அசத்தியுள்ளார் கிரேஸ் மற்றும் ரோஷ்ணி. இந்த வீடியோ ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்து வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in