The Indian Times

ஐயோ பாவம்.. JAIL TASK கொடுத்து COOK-களை JAIL-ல அடச்சிட்டாங்கப்பா..| COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் ஆகியோர் உள்ளனர்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றனர்.

இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வீட்ல விஷேசம் பட ப்ரோமோஷனுக்காக ஆர்ஜே பாலாஜி தனது மகன்களுடன் கலந்துகொண்டுள்ளார்.மற்றும் இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ள குக் வித் கோமாளி புகழும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார்.இந்த வாரம் கோமாளிகள் அனைவரும் சினிமா நட்சத்திரங்களின் கெட்டப்புகளில் வந்து அசத்தியுள்ளார்கள்.இந்த வாரம் சிறையில் குக்குகளை அடைத்து கோமாளிகளை வைத்து சமைக்க வைத்துள்ளனர்.இந்த முறை அலப்பறைக்கு பெயர்போன ஆர்ஜே பாலாஜியும் இணைந்துள்ளதால் கோமாளிகளுடன் இணைந்து இவர் அடிக்கும் லூட்டி காண்பவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது.இந்த வார ப்ரோமோ வீடியோக்கள் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரிக்க வைத்துள்ளது

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in