The Indian Times

தோழியின் திருமணத்திற்காக பிரம்மாண்ட பரிசு வழங்கிய CWC மணிமேகலை மற்றும் ஹுசைன்

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்

கொரோனா காலத்தில் கிராமத்தில் ஹுசைன் மற்றும் மணிமேகலை தங்கி இருந்தனர்.அங்கு தங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தினை சேர்த்துக்கொண்டு அவர்களுடன் விளையாடுவது,கலாட்டா செய்வது போன்றவைகளை வீடியோ எடுத்து அதனை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி மகிழ்ந்து வந்தனர்.இவர்களின் இந்த குரூப்பில் உள்ள பூமா என்பவருக்கு திருமணம் முடிந்துள்ளது.திருமணத்தின் அன்று மணிமேகலை மற்றும் ஹுசைன் செல்ல முடியாத காரணத்தினால் தற்போது அவர்களுக்கு கல்யாண பரிசு வாங்கி கொண்டு அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்களது வீட்டில் விருந்து சாப்பிட்டு அதனை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits: Hussain and manimegalai

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in