The Indian Times

நாடோடிகள் சசிகுமார் ஆக வந்து அலப்பறை செய்த குரேஷி…கடைசில அருணையும் அம்முவையும் சேர்த்து வச்சிட்டாரு

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்து அதகளம் செய்து வருகின்றனர்.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த முத்துக்குமார் ஆகியோர் உள்ளனர்.இறுதி கட்டத்தினை நெருங்கி வரும் நிலையில் இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் போட்டிகளம் என்ன ஆக போகிறதோ என்பது தெரியவில்லை அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றனர்.

இந்த வாரம் கோமாளிகள் சினிமா நட்சத்திரங்கள் போல் வந்து அசத்தியுள்ளனர்.மேலும் இந்த வார நிகழ்ச்சியில் வீட்ல விஷேசம் படக்குழுவில் உள்ள ஆர் ஜே பாலாஜி தனது மகன்கள் மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்நிலையில் குரேஷி இந்த முறை சசிகுமார் வேடத்தில் வந்து அனைவரையும் சிரிப்பால் ஆழ்த்தியுள்ளார்.இந்நிலையில் தொகுப்பாளர் ரக்ஷன் சசிகுமார் மாதிரி எதையாவது செய்து காமி என கூற உடனே அவர் நாடோடிகள் சசிகுமார் போல மாறி அம்முவையும் அதிர்ச்சி அருணையும் சேர்த்து வைத்துள்ளார்.இந்த வீடியோ காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.மேலும் இந்த வார நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினையும் அதிகரித்துள்ளது

https://youtu.be/ihJ4ihu_fjU

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in