The Indian Times

VJ சித்து மாதிரி நடிகை நட்சத்திரா வாழ்க்கை ஆபத்துல இருக்கு…என்னால காப்பாத்த முடியல…LIVE-ல் கதறி அழுத ஸ்ரீநிதி

பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி.இவர் அடிக்கடி எதையாவது செய்து பரபரப்பினை கிளம்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருப்பதாக ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அடிக்கடி எதையாவது கூறி பிரச்சனையில் சிக்கி கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.கடந்த வாரம் சிம்பு வீட்டின் முன்பு நின்று கொண்டு அவரை காதலிப்பதாகவும் ,அவரோடு சேர்த்து வைக்க வேண்டும் என கூறி போராட்டம் செய்து இன்ஸ்டாகிராமில் தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது அந்த சர்ச்சை முடிவதற்குள் அடுத்து ஒரு சர்ச்சயை கிளப்பியுள்ளார் ஸ்ரீநிதி.இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வந்த ஸ்ரீநிதி யாரடி நீ மோகினி சீரியலில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்ற நட்சத்திரா தவறானவரிடம் சிக்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்து பரபரப்பினை கிளப்பியுள்ளார்.கடந்த நவம்பர் 18ல் இருந்து மன அழுத்தத்தில் இருக்கிறேன்,எனக்கு நெருங்கி தோழி நட்சத்திரா,அவருக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும் தான் அவர் மிகவும் கஷ்டப்பட்டு இந்த துறைக்குள் வந்தார்.அவ நிறைய தப்புகள் பண்ணிருக்கா ஆனா அவ தப்பான பொண்ணு கிடையாது.அதனால் தான் அவளை 2 ஆண்டுகள் என் வீட்டில் தங்க வைத்திருந்தேன்.அவளை பார்க்கும் பொழுது என்னை பார்ப்பது போல் உள்ளது.

தற்போது நட்சத்திராவுக்கு ஒரு பையன புடிச்சிருக்கு இவர் ரொம்ப நல்லவரா இருக்காரே என நான் தான் அறிமுகப்படுத்தினேன் அவருடன் பேசினாள்.ஒரு மாதத்தில் திருமணம் செய்ய முடிவு எடுத்துவிட்டார்கள்,நல்ல பொண்ணை விடக்கூடாதுனு புடிச்சி வச்சிட்டாரு.கடந்த நவம்பர் 18 ஆம் தேதி அவருக்கு நிச்சயம் நடைபெற்றது.ஆனால் எங்களுக்கு தெரியாது.அவளுக்கு நான், சைத்ரா, ஷபானா, எங்கம்மா என நிறைய பேர் இருக்கோம்.அவளை மூளைச்சலவை செஞ்சிட்டாங்க,நான் அவ கூட பிறந்த தங்கச்சிய கூட கூப்பிடாமலா நிச்சயதார்த்தம் பண்ணுவீங்கனு கேட்டதுக்கு என்னை அடிக்க வந்துட்டாங்க அவங்கம்மா,நட்சத்திரா வாழ்க்கையை காப்பாற்ற முடியவில்லை,அன்றில் இருந்து மன அழுத்தத்தில் இருக்கிறேன்,ஷூட்டிங் போக முடியவில்லை,டேன்ஸ் ஆட முடியவில்லை அவள புடுச்சு வச்சிருக்காங்லானு தெரியல. என் நம்பரை பிளாக் பண்ண வச்சிருக்காங்க. மேலும் vj சித்துவால் தான் நட்சத்திரா விஷயத்தில் எனக்கு பயமா இருக்கு. என்ன அடிச்சாங்க, திட்டினாங்க என ஸ்ரீநிதி தெரிவித்தார்.

https://youtu.be/zNrQm29P560?t=16

Embed video credits: Little Talks

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in