The Indian Times

அம்மாவுக்கு பட்டுப்புடவை வாங்கிக்கொடுத்து அழகுபார்த்த CWC மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

Advertisement

தற்போது இவர் கணவர் ஹுஸைன் மற்றும் அம்மாவுடன் வெளியே ஷாப்பிங் சென்றுள்ளார்.அங்கு தனது அம்மாவுக்கு சர்ப்ரைஸ் ஆக புடவை வாங்கி கொடுத்துள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் மணிமேகலையை பாராட்டி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது பெருமளவு மணிமேகலை ரசிகர்களை கவர்ந்து வருகிறது

Embed video credits : Hussain manimegalai

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in