The Indian Times

டாக்டர் பட்டத்துடன் கெத்தாக பாட்டு பாடும் யுவன் சங்கர் ராஜா..ரசித்து பார்த்த மனைவி

யுவன் சங்கர் ராஜா சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அரவிந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் யுவன்.இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்தது.தொடர்ந்து ஹிட் பாடல்களை வரிசையாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளார்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல இளையராஜா தனது இசையால் எப்படி மக்களை அன்று கட்டிபோட்டாரோ அதேபோல் தற்போது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கட்டிபோட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சோகமாக இருந்தாலும் .சந்தோசமாக இருந்தாலும் யுவனின் இசை நம்மளை சொர்க்கத்திற்கே கொண்டு செல்லும் அந்த அளவிற்கு உள்ளது அவரது இசை.இவர் இசைக்கு பல திரைபிரபலங்கள் கூட இவருக்கு ரசிகராக உள்ளனர்.தளபதி விஜயின் மகன் கூட யுவன் சங்கர் ராஜாவின் பெரிய ரசிகர் தான். இத்தகைய பெரிய ரசிகர் வட்டத்தினை கொண்டவர்.தற்போது பல படங்களுக்கும் தொடர்ந்து பாடல்களை இசையமைத்து அசத்தி வருகிறார்.தற்போது யுவனுக்கு சத்தியபாமா யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

Advertisement

இன்று இந்த விருந்தினை யுவன் சங்கர் ராஜா பெற்றுள்ளார்.யுவன் சங்கர் ராஜா டாக்டர் பட்டத்துடன் இருக்கும் வீடியோ புகைப்படங்கள் பெருமளவு இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.டாக்டர் பட்டத்தினை வாங்கிய பிறகு யுவன் சங்கர் ராஜா பாடலை பாடியுள்ளார்.இதனை அவரது மனைவி ரசித்து பார்த்து வீடியோ எடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை யுவன் சங்கர் ராஜாவுக்கு தெரிவித்து வருகின்றனர்

https://www.youtube.com/shorts/cXCCJ3UJyiQ

Embed video credits : Behindwoods tv 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in