உமா ரியாஸ் உடன் குத்தாட்டம் போட்ட CWC புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் புகழ்.இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த நகைச்சுவை பலராலும் பேசப்பட்டு தற்போது கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.சினிமாவில் நடிக்க வேண்டும் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு ஓரமாக நின்று விட்டு செல்லவேண்டும் என சினிமா வாய்ப்பு தேடியவர் இன்று கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.இதற்கு முழு காரணம் அவரது கடின உழைப்பு ஆகும்.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை ,இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் வானதியும் பூங்குழலியும் குறும்பு புகைப்படங்கள் இதோ

உமா ரியாஸ் உடன் குத்தாட்டம் போட்ட CWC புகழ் 1

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் உமா ரியாஸ். இவரும் நகைச்சுவையில் கலக்க கூடியவர்.ஆனால் என்ன சமையல் தெரிந்ததால் போட்டியாளராக வந்துவிட்டார்.போட்டியாளராக வந்தும் இவர் அளப்பறைக்கு அளவே இல்லை.பெரிய நடிகை என்கிற திமிரு இல்லாமல் கோமாளிகளுடன் இணைந்து சர்வ சாதாரணமாக பேசி விளையாடி மகிழ்வார்.இதில் இவர் கணவர் ரியாஸ் காணை அதிகம் கேலி செய்வது புகழ் தான்.ரியாஸ் கான் உடற்பயிற்சி செய்து பாக்ஸர் போல உள்ளதால் மேடம் பாஸ்கரை வர சொல்லுங்க என கூறி கிண்டல் அடிப்பார்.உமா ரியாஸ் மற்றும் புகழ் கூட்டணியில் நகைச்சுவைக்கு பஞ்சம் என்பதே கிடையாது.

கட்டாயம் படிக்கவும்  இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்களின் தொகுப்பு இதோ

உமா ரியாஸ் உடன் குத்தாட்டம் போட்ட CWC புகழ் 2

விளம்பரம்

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு உமா ரியாஸை சந்தித்து புகழ் நடனம் ஒன்று ஆடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதில் ரியாஸ் கானும் இடையே வந்த்து நடனமாடியுள்ளார்.இந்த வீடியோவை பதிவிட்ட உமா ரியாஸ் ஒரு வழியாக புகழ் பாஸ்கரை சந்தித்து விட்டார் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சுய உணர்வை இழந்த மனோபாலாவுக்கு பாடல் பாடிய மகன்... வெளியான வீடியோவால் ரசிகர்கள் கடும் சோகம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment