The Indian Times

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் நேரில் வாழ்த்திய பிரபலங்கள்…..வைரலாகும் புகைப்படங்கள்

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு மேல் இவர்களது திருமணம் எப்பொழுது ஆர்வம் அதிகரித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

Pic Photographer Credits: Joseph Radhik
Pic Photographer Credits: Joseph Radhik
Advertisement

சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.ரஜினி,ஷாருக்கான்,மணிரத்தினம்,சூர்யா,ஷாலினி அஜித் இயக்குனர் அட்லீ என பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரிடையாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமக்கள் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர் இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மாபெரும் அளவில் வைரலாகியது.தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஹனிமூன் சென்று திரும்பிய பிறகு தங்களது படத்தின் வேலைகள் பார்க்க தொடங்கிவிட்டனர்.

Pic Photographer Credits: Joseph Radhik
Pic Photographer Credits: Joseph Radhik

இயக்குனர் கவுதம் மேனன் இவர்களின் திருமண வீடியோவை இயக்கியதாக கூறப்படுகிறது.கல்யாண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதால் கல்யாணத்தில் கலந்துகொண்டவர்கள் செல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement
Pic Photographer Credits: Joseph Radhik
Pic Photographer Credits: Joseph Radhik

இந்நிலையில் நயன்தாராவின் சில திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்,ஷாருக்கான்,அட்லீ மணிரத்தினம் என அனைவரும் மணமக்களை நேரில் வாழ்த்தியுள்ளனர்.தற்போது வீடியோ வெளியாவதற்கு முன்னரே கல்யாண புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்

Pic Photographer Credits: Joseph Radhik
Pic Photographer Credits: Joseph Radhik

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in