உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நிவின் பாலி..கலாய்க்கும் ரசிகர்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் நிவின் பாலி.இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே மலையாளத்தில் உள்ளது.மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நிவின் பாலி.தொடர்ந்து மலையாளத்தில் பல நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தமிழில் அறிமுகம் ஆக சரியான நேரத்திற்காக காத்திருந்த நிலையில் இவருக்கு நேரம் படம் அமைந்தது.இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகினார்.,இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் ரசிகர்களால் அறியப்பட்டவர் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நிவின் பாலி..கலாய்க்கும் ரசிகர்கள் 1

விளம்பரம்

பின்னர் மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் ப்ரேமம் படம் வெளியாகியது.இப்படம் உச்சகட்ட வரவேற்பினை பெற்று நிவின் பாலியை முன்னணி நடிகராக மாற்றியது.மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் இப்படத்தினை தொடர்ந்து மாபெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.தொடர்ந்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க ஆரம்பித்து வரவேற்புகளை பெற்று வருகிறார்.இவரது சினிமா வாழ்க்கையில் ப்ரேமம் படம் இவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்து விட்டது.இதனால் மகிழ்ச்சியடைந்த நிவின் பாலி கதைகளை கண்ணும் கருத்துமாக கேட்டு தற்போது வரை நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நிவின் பாலி..கலாய்க்கும் ரசிகர்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் உடல் எடை குறைந்து காணப்பட்டு வந்த நிவின் பாலி தற்போது யாருமே எதிர்பார்க்காத வண்ணம் உடல் எடை அதிகரித்துள்ளார்.நேற்று இவர் நடிப்பில் உருவாகிய மஹாவீரயர் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார்.அப்போது உடல் எடை கூடிய நிவின் பாலியை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த புகைப்படம் அதிகளவு இணையத்தில் வைரலாகியது.இதனை பார்த்த நெட்டிசன்கள் சிம்புவாக மாறிவிட்டார் போல என கேலி செய்து வருகின்றனர்.ஆனால் இவரின் அடுத்த படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்துள்ளார் நிவின் பாலி என தகவல் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment