நாங்க CAR வாங்கிட்டோம்…உழைப்பால் உயர்ந்த MYNA NANDHINI & YOGI

நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நந்தினி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது. சரி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வோம் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.சின்னத்திரை நடிகராக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்து மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்து விட்டார்.

கட்டாயம் படிக்கவும்  தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னாவின் கலக்கல் புகைப்படங்கள்

நாங்க CAR வாங்கிட்டோம்...உழைப்பால் உயர்ந்த MYNA NANDHINI & YOGI 1

விளம்பரம்

பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து தொடர்ந்து அப்டேட் செய்து ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண புகைப்படங்கள்

நாங்க CAR வாங்கிட்டோம்...உழைப்பால் உயர்ந்த MYNA NANDHINI & YOGI 2

விளம்பரம்

யூடியூப் சேனலில் இவர்கள் வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு தங்களது வீடியோவில் நகைச்சுவையாக பேசி அசத்தி வருகிறார்கள்.பல போராட்டங்களுக்கும்,முயற்சிகளுக்கும் பின்னர் மைனா நந்தினியும் அவரது கணவரும் புதிய கார் ஒன்றினை வாங்கியுள்ளனர்.அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு மேல் மகிழ்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.உழைப்பால் முன்னேறலாம் என்பதற்கு மைனா நந்தினி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  நம்ம எதிர்நீச்சல் ஆதிரையா இது? மாடர்ன் உடையில் மாஸ் பண்ணுறாரே.. எதிர்நீச்சல் ப்ரோமோ

நாங்க CAR வாங்கிட்டோம்...உழைப்பால் உயர்ந்த MYNA NANDHINI & YOGI 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment