நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துகொண்ட சூர்யா ஜோதிகா

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் எப்பொழுது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துகொண்ட சூர்யா ஜோதிகா 1

விளம்பரம்

திருமண வீடியோ முழுவதும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதால் பத்திரிகையாளர்கள் யாரும் திருமணத்தில் அனுமதிக்கப்படவில்லை மேலும் கலந்துகொள்பவர்கள் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.இவர்களது திருமணத்தில் பாதுகாப்பிற்காக 80 பவுன்சர்கள் மற்றும் போலீஸ்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.மேலும் பத்திரிகைகளில் உள்ள கியூ ஆர் கோடுகள் மூலம் தான் அனைவரையும் உள்ளே அனுமதித்தனர்.இவ்வாறு பெரும் கட்டுப்பாடுகளுடன் இவர்கள் திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமண வீடியோவிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துகொண்ட சூர்யா ஜோதிகா 2

விளம்பரம்

தற்போது திருமணத்தில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இவர்கள் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த்,இயக்குனர் மணிரத்னம் ,அட்லீ,ஷாருக்கான் என பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர் மேலும் நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா உடனும் அதேபோல் விஜய் சேதுபதி அவரது மனைவியுடனும் திருமணத்திற்கு நேரில் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment