The Indian Times

டேய் பாலா விடுடா என்னை.. ஆள் கிடைக்கலன்னு புகழ் உடன் ரொமான்ஸ் செய்த KPY பாலா

எதையாவது சாதித்து விடலாம் என சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் செல்கின்றனர்.அதில் சாதித்தவர்கள் குறைவு.காரணம் முயற்ச்சி செய்யாததால்.எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கடின உழைப்பினால் வெற்றியாளராக மாறினார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு. இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்க பலர் உள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.வாரம் தோறும் புது புது வேடங்களில் வந்து அனைவரையும் கலாய்த்து சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர்

Advertisement

தற்போது புகழுடன் பாலா லண்டன் சென்றுள்ளார்.அங்கு சச்சின் படத்தில் இடம்பெற்ற கண் மூடி திறக்கும் பாடலுக்கு ஆள் இல்லை என புகழை ஜெனிலியாவாக மாற்றி ரோமேன்ஸ் செய்து புகழை படாதபாடு படுத்தியெடுத்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் புகழ் படாதபாடு படுவதை கண்டு சிரித்துள்ளனர்.இந்த வீடியோவை தற்போது வரை 16 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in