The Indian Times

வசூலில் தாறுமாறு செய்த ஆட்டநாயகன்… கோடிகளில் கொட்டிய வாரிசு வசூல்…

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.

Advertisement

தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.அதன்படி தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்துள்ளார்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும் சரத்குமார்,ஷாம்,பிரபு ,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த புதன்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertisement

இப்படத்தினை தளபதி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர். அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் காட்சிகளாக திரையரங்கில் ஓடி வருகிறது. இப்படத்துடன் தல அஜித் நடிப்பில் வெளியாகிய துணிவு படமும் வெளியாகியது.ஆரம்பத்தில் தமிழகத்தில் துணிவு வசூல் வாரிசை விட அதிகமாக இருந்தாலும்,வாரிசு படம் வெளியாகி 5 நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.இதனால் தளபதி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.அதே சமயம் துணிவு படத்தின் 5 நாள் வசூல் விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in