மோதி பார்த்தாலே முடிப்பேன் பொலிபோட்டு… தனுஷின் வாத்தி படத்தின் நாடோடி மன்னன் பாடல் வெளியாகியது

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

மோதி பார்த்தாலே முடிப்பேன் பொலிபோட்டு... தனுஷின் வாத்தி படத்தின் நாடோடி மன்னன் பாடல் வெளியாகியது 1

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.அதேபோல சமீபத்தில் வெளியாகிய தனுஷ் நடிப்பில் உருவாகிய நானே வருவேன் படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.இப்படத்தின் வெற்றிகளை தொடர்ந்து தனுஷ் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவர் அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

மோதி பார்த்தாலே முடிப்பேன் பொலிபோட்டு... தனுஷின் வாத்தி படத்தின் நாடோடி மன்னன் பாடல் வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது நடிகர் தனுஷ் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழில் வாத்தி என வெளியாக உள்ளது.முதல் முறையாக தனுஷ் நடிப்பில் இரண்டு மொழிகளில் உருவாகும் படம் இது ஆகும்.சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் இப்படத்தினை இணைந்து தயாரித்து வருகின்றனர்.மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் தோட்டப்பள்ளி மது.சமுத்திரக்கனி,நரேன்,என பலரும் நடித்துள்ளனர்.ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .அண்மையில் இப்படத்தில் இருந்து வா வாத்தி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது இப்படத்தின் நாடோடி மன்னன் எனும் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

விளம்பரம்

Embed video credits : ADITYA TAMIL MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment