The Indian Times

தமிழிலும் பாக்ஸ் ஆபிஸை அடித்து காலி செய்த KGF2:மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎப்.இப்படத்தின் முதல் பாகம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பினை சேர்த்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் வசூல் சாதனை படைத்தது அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது

Advertisement

இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 880 கோடிக்கு வசூலித்து சாதனை செய்து வருகிறது.தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 70 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது தமிழகத்தில் ஏற்கனவே கேஜிஎப் படத்திற்காக ஒதுக்கப்பட்ட திரையரங்குகள் காணாமல் தற்போது கூடுதல் காட்சிகளையும் ,திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.எதிர்பார்த்ததை விட கேஜிஎப் 2 படத்திற்கு அதிக வரவேற்பு தமிழகத்தில் கிடைத்துள்ளது சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பொறாமையாகத்தான் அமைந்திருக்கும்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in