The Indian Times

சார் உண்மையைத்தான் சொல்லுறீங்களா?என் வீட்டு கிச்சன்ல இந்த பாட்டு தான் கேட்டுக்கிட்டே இருக்கும் :தெலுங்கு நடிகர் ராம் சரண்

தளபதி விஜய் நடிப்பில்,இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.இப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை பெற்றுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி குரலில் வெளியாகி அரபிக்குத்து பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.யூடியூபில் இதுவரை 34 கோடி பேர் இந்த பாடலை பார்த்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் ஆச்சார்யா படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் ராம் சரண் மற்றும் நாயகி பூஜா ஹெக்டே பேட்டியளித்து வருகின்றனர்.பேட்டியின் போது தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் குறித்து கேட்கும் பொழுது நடிகர் ராம் சரண் கூறியதாவது,என் வீட்டில் எந்த பக்கம் சென்றாலும் அரபிக்குத்து பாடல் தான் ஒலிக்கும்,கிட்சன், கார், ரூம் எல்லா இடத்திலேயும் பிளே லிஸ்ட்ல இந்த பாட்டு தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in