250 மில்லியன் டாலர் செலவில் உருவாகி இருக்கும் அவதார் 2 வெளியாகும் தேதி அறிவிப்பு

2009ஆம் ஆண்டு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் எழுதி,இயக்கி,தயாரித்து,எடிட்டிங்கும் செய்து வெளியாகிய படம் அவதார்.இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு உலகம் முழுவதும் கிடைத்தது.இப்படம் உலகம் முழுவதும் 14,000 க்கும் அதிகமான தியேட்டர்களில் 3டியில் வெளியாகியது.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அதுகுறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
250 மில்லியன் டாலர் செலவில் உருவாகி இருக்கும் அவதார் 2 வெளியாகும் தேதி அறிவிப்பு 1

கட்டாயம் படிக்கவும்  அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

அவதார் முதல் பாகத்திற்கு பிறகு இரண்டாவது பாகத்தினை எடுக்க இயக்குனர் ஜேம்ஸ் 2014 ஆம் ஆண்டு திட்டமிட்டார்.ஆனால் இறுதியாக 2018ல் தான் பட வேலைகளை தொடங்கினார்.இரண்டாம் பாகத்துடன் சேர்த்து 3ஆம் பாகத்தின் சில காட்சிகளையும் எடுத்துள்ளதாகவும்,பட்ஜெட் குறைவாகியுள்ள காரணத்தினால் 3ஆம் பாகத்தின் படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  செல்ல மகளை தனது டான்ஸ் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

250 மில்லியன் டாலர் செலவில் உருவாகி இருக்கும் அவதார் 2 வெளியாகும் தேதி அறிவிப்பு 2

தற்போது 250 மில்லியன் டாலர் செலவில் உருவாகி இருக்கும் அவதார் 2 திரைப்படத்தினை இந்த ஆண்டு டிசம்பர் 16 வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.முன்னதாக வெளியாகிய முதல் பாகம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன் என மூன்று பிரிவுகளில்
ஆஸ்கர் விருதுகளை அள்ளி குவித்தது.தற்போது ஜேம்ஸ் கேமரூன் அவதார் 3ஆம் பாகம் மட்டுமில்லாமல் 4 மற்றும் 5 என பாகங்களை தொடர முடிவு செய்துள்ளதாகவும் தகவ; வெளியாகியுள்ளது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment