The Indian Times

அடடே பிரமாதம்…விக்ரம் படத்தின் பாடலை பாடிய ஆங்கில பாடகி

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.திரையரங்கில் 25 நாட்களை தாண்டியும் வெற்றிநடை போட்டு ஓடிக்கொண்டு வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

உலகம் முழுவதும் வசூல் வேட்டையை இப்படம் நடத்தி வருகிறது.தமிழகத்தில் பாகுபலி வசூல் சாதனையை குறைந்த நாட்களிலேயே முறியடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.படம் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி என்பதால் கமல்ஹாசன் உச்ச மகிழ்ச்சியில் உள்ளார்.மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

Advertisement

இப்படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தது ,அதிலும் கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது.மேலும் படத்தில் இடம் பெற்ற நாயகன் மீண்டும் வரார் என்ற பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் பலர் செல்போனில் அது ரிங் டோன் ஆகவும் உள்ளது என்றால் மிகையல்ல.அந்த அளவிற்கு பெரும் வரவேற்பினை இப்பாடல் பெற்றுள்ளது.தற்போது நாயகன் மீண்டும் வரார் என்ற பாடலை ஆங்கிலத்தில் பிரபல பாடகியான எம்மா ஹீஸ்டர் பாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in