வீடு திரும்ப முடியாத அளவுக்கு வந்த வாய்ப்பு – BB மேடையில் தளபதி 67 படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஜனனி

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.ஜனனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

வீடு திரும்ப முடியாத அளவுக்கு வந்த வாய்ப்பு - BB மேடையில் தளபதி 67 படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஜனனி 1

விளம்பரம்

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

வீடு திரும்ப முடியாத அளவுக்கு வந்த வாய்ப்பு - BB மேடையில் தளபதி 67 படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஜனனி 2

விளம்பரம்

பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் பேசியதாவது,நிறைய பேருக்கு என்னை தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்,அது நடந்துவிட்டது,மக்கள் அவர்கள் வீட்டு பிள்ளை போல என்னை பார்க்கிறார்கள் வந்த வேலை முடிந்துவிட்டது என கூறியுள்ளார். பின்னர் கமல் நீங்க திரும்ப இலங்கை போனீங்களா என கூறவே இல்லை என தெரிவித்துள்ளார்.உடனே கமல் வீடு திரும்ப முடியாத அளவுக்கு உங்களுக்கு இங்கு வாய்ப்பு வந்திருக்கு அல்லவா என தளபதி 67 படத்தில் அவர் ஒப்பந்தமாகி இருப்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.இதற்கு ஜனனியும் ஆமா என பதில் தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment