The Indian Times

பாரதிக்கு அமெரிக்காவில் படிக்க வாய்ப்பு – நினைவுகளை மீட்டெடுக்க கண்ணம்மாவிடம் கெஞ்சும் சௌந்தர்யா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது குழந்தைகள் என பாரதி டி என் ஏ ரிசல்ட் மூலம் தெரிந்துகொண்டு தன்னுடன் வாழ வரவேண்டும் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.ஆனால் அவர் செய்ததை மறக்க முடியாமல் கண்ணம்மா அவரை மன்னிக்க மறுத்து விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அவர்கள் இருக்கும் இடத்திற்கே வருகை தருகிறார்.அங்கு மனைவியின் மனதினை மாற்ற எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை,இருந்தும் போராடுகிறார்,இந்நிலையில் பாண்டி பாரதியை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவருக்கு பழசு மறந்துவிடுகிறது

இழந்த நினைவுகளை மீட்டெடுக்க கண்ணம்மாவிடம் அனைவரும் கெஞ்சி கேட்கின்றனர்,கண்ணம்மாவும் தன்னால் முடிந்ததை செய்து வருகிறார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது,ப்ரோமோவில் பாரதிக்கு வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு வந்துள்ளது அவனை சீக்கிரம் குணமாக்கி பழைய நினைவுகளை மீட்டுக்கொடுக்க பாரதியின் அம்மா கண்ணீர் மல்க கண்ணம்மாவிடம் கேட்டுக்கொள்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in