சண்டை போடாதீங்க..எல்லாருக்கும் முத்தம் உண்டு…விக்ரம் படக்குழுவுக்கு முத்தம் கொடுத்த உலகநாயகன்

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் ,காளிதாஸ் ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர்.ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட்டுள்ளார் .இப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது விக்ரம்.படத்தினை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கூறுவது ஒன்றே ஒன்று தான் தமிழ் சினிமா மீண்டும் உயர்ந்துவிட்டது .

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

சண்டை போடாதீங்க..எல்லாருக்கும் முத்தம் உண்டு...விக்ரம் படக்குழுவுக்கு முத்தம் கொடுத்த உலகநாயகன் 1

விளம்பரம்

படம் நல்ல வசூலை உலகம் முழுவதும் பெற்று வருவதால் மகிழ்ச்சியில் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு புதிய கார் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார் மேலும் அவரது 13 துணை இயக்குனர்களுக்கும் பைக்குகளை வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக அளித்துள்ளார்  கமல்ஹாசன் . கதாநாயகனாவும் ,தயாரிப்பாளராகவும் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார் உலகநாயகன்.மேலும் விக்ரம் படத்தின் மொத்த வசூல் 300 கோடியை தொட உள்ளதாக அண்மையில் கமல்ஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் அறிவித்து இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

சண்டை போடாதீங்க..எல்லாருக்கும் முத்தம் உண்டு...விக்ரம் படக்குழுவுக்கு முத்தம் கொடுத்த உலகநாயகன் 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் வெற்றியை நேற்று சென்னையில் படக்குழு கொண்டாடியது.அனைவரும் இப்படத்தின் தங்களது ஈடுபாடுகள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவளிக்கப்பட்டது.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவு வைரலாகி வந்தது.உலகம் முழுவதும் விக்ரம் சக்கை போடு போட்டு வருகிறது.நேற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ்,அனிருத்,விஜய் சேதுபதி,உதயநிதி ஸ்டாலின் ஆகியவர்களுக்கு உலகநாயகன் அன்பளிப்பாக முத்தம் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த உலகநாயகன் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment