The Indian Times

ப்பா chance-சே இல்லை…சேலையில் மரண குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி….

மருத்துவர் ஆன சாய் பல்லவி நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடினார்.ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.சிறு காதாபாத்திரத்தில் சினிமாவில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.இன்று தெலுங்கு சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகையாக உருவெடுத்து இருக்கிறார் சாய் பல்லவி .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் என்ற மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.தமிழ் நாட்டை சேர்ந்த நடிகை சாய் பல்லவி தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவது இவரது தமிழ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக தான் அமைந்துள்ளது.

Advertisement

தற்போது சாய்பல்லவி தெலுங்கில் நடிகர் ராணாவுடன் இணைந்து விராட பருவம் என புதிய படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார்.இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிசியாக கலந்துகொண்ட சாய் பல்லவியிடம் ரசிகர்கள் நடனம் ஆட கேட்கவே மேடையில் சேலையில் மிரட்டல் நடனம் போட்டு அங்கு இருந்தவர்களை அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவியை புகழ்ந்து அவரது புதிய படத்திற்கு கருத்துக்களை பதிவிட்டும் வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in